BREAKING NEWS

எஸ். ஏ. சூர்யாவுடன் இணைந்து தமிழ் படத்தில் நடிக்கிறார், இந்தி நடிகர் அமிதாப்பச்சன்.

 

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முதன் முதலாக தமிழில் நடிக்க வருகிறார்.

இந்தி சூப்பர் ஸ்டார்

இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர். அமிதாப்பச்சன். அவர் இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

முதல் முறையாக அவர் இப்போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

உயர்ந்த மனிதன்

அந்தப் படத்துக்கு உயர்ந்த மனிதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

இதில் அவருடன் இணைந்து தமிழ் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஏ.சூர்யா நடிக்கிறார்.

இதற்கான அறிவிப்பை எஸ். ஏ. சூர்யா நேற்று மாலை நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது;-

டைரக்டரும், கதை ஆசிரியருமான தமிழ்வாணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஒரு கதையின் அவுட்லைன் சொன்னார். பிரமாதமாக இருந்தது. அதை சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றிகொண்டு வாருங்கள் என்றேன்.ஒரு வருடம் கழித்து அவர் அற்புதமான கதையுடன் வந்தார் இரண்டு ஹீரோ கொண்ட இக்கதையில் அமிதாப்பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்…அமிதாப்பச்சன் இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டார். அவரை தமிழில் நடிக்க வைக்க பலர் முயன்றும் அவர் சம்மதம் கொடுக்கவில்லை.நாம் எப்படி?என்றேன். அதற்கு தமிழ்வாணன் ’ஒரேஒருமுறை அவரிடம் கதை சொல்லமட்டும் அனுமதி வாங்கிகொடுங்கள்.கதை அவருக்கு பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார்..‘‘சரி நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்தேன். அமிதாப்பை சந்திக்க டைரக்டர் ஏ.ஆர்..முருகதாஸ் உதவி செய்தார். அமிதாப்பை சந்தித்து கதை சொன்னோம். கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.கேட்டதும் நடிக்கிறேன் என்றார். அதைக்கேட்டதும் எனக்குஅவ்வளவு மகிழ்ச்சி. நான் இதை ஒரு சாதனையாகவே கருதுகிறேன். 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். இரண்டு கதாநாயகர்களைப் பற்றிய கதையில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நானும் நடிக்கிறேன் . தமிழ், இந்தியில் படம் தயாரிக்கப்படுகிறது. தமிழில் அமிதாப்பச்சன் அறிமுகம் ஆவது மாதிரி இந்தியில் நான் அறிமுகம் ஆகிறேன்.நான் நடிக்கும் முதல் இந்திப்படம் இது.கதை எழுதி தமிழ்வாணன் இயக்குகிறார்.

இவ்வாறு எஸ்.ஏ. சூர்யா கூறினார். தமிழ் மற்றும் இந்தி யில் தயாராகும் இப்படத்தை திருசெந்தூர் முருகன் புரடெக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் கே,சுரேஷ்கண்ணன் தயாரிக்கிறாபடப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. ..




Leave a Reply