BREAKING NEWS

எஸ்கார்ட்ஸ் புதிய திட்டம்

எஸ்கார்ட்ஸ் புதிய திட்டம்

சென்னை, மே.19-

என்ஜினியரிங் சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று எஸ்கார்ட்ஸ். மேலும், இந்திய ரயில்வே துறைக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் மிகப் பெரிய இந்திய நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இது தற்போது, ரயில்வே உபகரணங்கள் உற்பத்திப் பிரிவின் 2-வது புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான இந்திய ரயில்பெட்டி கண்காட்சியில் பங்கேற்றுள்ள எஸ்கார்ட்ஸ் நிறுவனம், தனது ரயில்வே உபகரண உற்பத்தி விரிவாக்கம் குறித்தும், பரிதாபாத்தில் அமையும் தனது இரண்டாவது புதிய தொழிற்கூடம் பற்றியும் தகவல்களை பகிர்ந்து கொண்டது.

இதுகுறித்து பேசிய எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் ரயில்வே உபகரண உற்பத்திப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி திபங்கர் கோஷ் கூறுகையில், “இந்திய ரயில்வே துறை, தன்னை நவீனமயமாக்கிக் கொள்ளவும், நம் நாட்டு உற்பத்தி பொருட்களையே அதிகம் பயன்படுத்தவும் எடுத்து வரும் முயற்சிகளில் ஒரு கிரியா ஊக்கியாக எங்களது நிறுவனம் பங்காற்றி வருகிறது. இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்ட எதிர்பார்ப்பின்படி, நமது தேவைகளுக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் விதமாக, அதற்கு தேவைப்படும் அதி நவீன தொழில்நுட்பங்களைப் பெற, நாங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்களைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.




Leave a Reply