BREAKING NEWS

எழுத்தாளர் ராஜநாராயணனின் மனைவி மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளராகிய ராஜநாராயணனின் மனைவி மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் இலக்கியத்தின் மூத்த இலக்கியவாதி எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இவரது மனைவி கணவதியம்மாள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, கரிசல் மண்ணின் மகத்தான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் துணைவியார் கணவதியம்மாள் மறைவுற்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கி.ரா.வின் சொந்த ஊரான இடைச்செவல் தொடங்கி அவர் பணியாற்றிய புதுச்சேரி வரை, தமது வாழ்க்கைப் பயணத்தில் எந்நாளும் தமக்குத் துணை நின்ற தமது துணைவியார் மறைவினால் பேரிழப்பைச் சந்தித்துள்ளார். கி.ரா.விற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *