தற்போதைய செய்திகள்

எழுத்தாளர் பாலகுமாரன் உடல் தகனம்

எழுத்தாளர் பாலகுமாரன் உடல் தகனம்

சென்னை, மே 16-

எழுத்துலகில், தனி முத்திரை பதித்த பாலகுமாரன், திரைத்துறையிலும், சிறந்த வசனகர்த்தவாக திகழ்ந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 71. மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட பாலகுமாரன் உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகர்கள் சிவக்குமார், நாசர், விவேக், மனோபாலா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோரும் பாலகுமாரன் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர். உறவினர்களின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாலகுமாரன் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Leave a Reply