BREAKING NEWS

எலக்ட்ரிக் கார்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் அதற்கான சார்ஜர்களள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படுவதாக டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக எலக்ட்ரானிக் வாகனங்கள் மீதான வரி குறைக்க டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஜூன் 21-ம் தேதியன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், எலக்ட்ரிக் வாகன சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர எலக்ட்ரிக் பஸ்களை வாடகைக்கு விடுவோருக்கு வரி விலக்கு அளிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி குறைப்பு ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply