BREAKING NEWS

எம்80 இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125.


 

இந்தியாவில் எம்80 பைக் விட்டு சென்ற இடத்தை படிக்க ஹோண்டா நிறுவனம் சூப்பர் கப் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது.

சூப்பர் கப்

ஹோண்டா நிறுவனம் தனது புதிய வாகனமாக சூப்பர் கப் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்த விருக்கிறது. ஹோண்டா சூப்பர் கப் குடும்பத்தில் இணையும் 125 சிசி பைக் இது. இந்த சூப்பர் கப் 125 பைக்கில் 125 சிசி இன்ஜின், இரண்டு வாழ்வு, 4 ஸ்டோக், சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 7000 ஆர்பிஎம்மில் 9.5 பிஎச்பி பவரையும், 5250 ஆர்பிஎம்மில் 10.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த சூப்பர் கப் 125 பைக் காலில் கியர் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஸ்பீடு கியர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் ஆட்டோமெட்டிக் கிளட்ச் உடன் வருகிறது.

டிஜிட்டல்

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பகுதி பாதி டிஜிட்டல் மற்றும் பாதி அனலாக் என்ற முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஸ்க் பிரேக் வசதியும்உள்ளது.

இந்த பைக்கின் சீட் 780 மிமீ சீட் உயரத்துடன் வருகிறது. முக்கிய அம்சமாக இந்த பைக் கீ லெஸ் ஸ்மார்ட் கீ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளுது. இந்த பைக் ஐரோப்ப நாடுகளில் இரண்டு விதமான கலர் வேரியன்ட்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை இது வரை அறிவிக்கப்படவில்லை ஹோண்டா கப் ரக பைக்குகள் நீண்ட நாட்களாக அதிக அளவில் விற்பனையாகும் ரக பைக்காக இருக்கிறது.

பஜாஜ் எம்80

இந்த கப் ரக பைக் ஜப்பானில் மிக பிரபலமான ரக பைக். ஜப்பானில் மட்டும் அல்லாமல் ஆசிய கண்டத்தில் பல்வேறு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் இந்த ரக பைக் பிரபலம் தற்போது இந்த ரக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்த அந்நிறுவனம் சூப்பர் கப், 125 அல்லது 110 சிசி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது.

இந்த பைக்கின் ஒட்டு மொத்த லுக்கை பார்க்கும் போது இந்தியாவில் ஏற்கனவ நல்ல விற்பனையில் இருந்த பஜாஜ் நிறுவனத்தின் எம்80 பைக்கை போலவே இருக்கிறது. அந்நிறுவனம் எம்80யில் 4 ஸ்டோக் என்ற பைக்கை ரிலீஸ் செய்தது. அந்த பைக் அதிக விற்பனையை எட்ட வில்லை எந்த பைக்கின் லுக்கை கிட்டத்தட்ட அப்படியே பெற்றிருக்கிறது.




Leave a Reply