BREAKING NEWS

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி

மதரசாபட்டினம், தெய்வதிருமகள், தலைவா, சைவம், தேவி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ‘தலைவி‘‘ என்ற பெயரில் சினிமா படமாக எடுக்க இருக்கிறார்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதற்கிடையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எம்.ஜி.ஆராக நடிக்க போவதை படக்குழு உறுதி செய்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *