BREAKING NEWS

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை – தமிழக அரசு அறிவிப்பு.

தலைவர்கள் கோரிக்கை

கொடூர குற்றங்கள் அல்லாத பல்வேறு குற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருபவர்களை அவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டும், அவர்களது குடும்ப நலனை கருத்தில் கொண்டும் முன் கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.

நன்னடத்தை

இந்நிலையில், ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துவருபவர்களின் நன்னடத்தை உள்ளிட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேரை தமிழக அரசு நேற்று விடுதலை செய்வதாக அறிவித்தது.

அரசு செய்தி அறிவிப்பு

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளினை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து வரும் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது.

அரசாணை

இதன் தொடர்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் 1.2.2018 மற்றும் 3.5.2018-ஆகிய தேதிகளில் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

10 ஆண்டுகள் நிறைவு

ஜெயலலிதா வழியில் நடைபெறும் அரசு, 25.2.2018 அன்று 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுகிறார்கள் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply