BREAKING NEWS

எம்.எஸ்.தோனிக்கு மாற்றாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

இந்திய அணியில் எம்.எஸ்.தோனிக்கு மாற்றாக இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள கவுதம் காம்பீர், ஓய்வு என்பது தனிப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.

விரும்பும் வரை விளையாட முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், எதிர்காலத்தையும் கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் தோனி விளையாடுவது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள காம்பீர், அடுத்த நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான வீரர்கள் அணிக்கு வரவேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

அணியின் கேப்டனாக உள்ளவர்கள், இந்த வீரர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தைரியமாக எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள காம்பீர், அடுத்த உலகக்கோப்பையில் தோனி இருப்பாரா என்பதை விடுத்து, அடுத்த உலகக்கோப்பையை வெல்லப் போவது குறித்தே சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே தோனியைத் தாண்டி ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *