BREAKING NEWS

” எமெர்ஜென்சி அல்ல., அர்ஜென்சி” மக்களவை தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து. மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ” தற்போது எமெர்ஜென்சி அல்ல., அர்ஜென்சி” என்று குறிப்பிட்டார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றி அமைக்க முடியும். சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீரின் நிரந்தர குடிமக்களை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே தீர்மானிக்க முடியும்.

குடியரசு தலைவர் கையெழுத்துடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் அறிவிப்பாணை வெளியீடு. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் வைகோ, திருச்சி சிவா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, ஜனநாயக படுகொலை என வைகோ ஆவேசமாக பேசினார்.

வைகோ பேசும்போது, எமெர்ஜென்சி மீண்டும் வந்திருக்கிறது என கூறினார். இதற்கு வெங்கையா நாயுடு “எமெர்ஜென்சி இல்லை அர்ஜென்சி” என கூறினார்.

குலாம் நபி ஆசாத்: இந்த எம்.பி.க்களின் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். (அரசியலமைப்பு நகலை கிழிக்க முயன்ற மெகபூபா முப்தி கட்சி எம்.பி.க்கள் மிர் பயாஸ் மற்றும் நஜீர் அகமது லாவே). இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் துணை நிற்கிறோம். ஆனால் நேற்று பாஜக அரசியலமைப்பை கொலை செய்துள்ளது என கூறினார்.




Leave a Reply