BREAKING NEWS

‘என் படத்தை தூக்கிடாதீங்க.’ -. பார்த்திபன் கெஞ்சல்

இயக்குனர் பார்த்திபன் மட்டுமே நடித்து வெளிவந்து இருக்கும் படம் ‘ ஒத்த செருப்பு சைஸ் 7’‘ படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. இந்த புதிய முயற்சியை விமர்சகர்கள் பாராட்டினாலும், தியேட்டர்களில் உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பல தியேட்டர்களில் இருந்து படத்தை எடுத்து விட்டார்கள். இந்த நிலையில் பார்த்திபன் ‘‘ படத்தை எடுத்து விடாதீர்கள்’‘ என கெஞ்சி ஒரு தியேட்டர் அதிபர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய ஒத்த செருப்பு மிகப்பெரிய தயாரிப்பாளர் எடுத்த படம் அல்ல.. ஒரு நிஜமான, தூய்மையான, நேர்மையான கலைஞன் எடுத்த படம். படம் எடுக்க பணம் இருக்கிறதா இல்லையா என்பதல்ல என்னுடைய திறமையை நம்பி இருக்கிறதை வைத்து கடன் வாங்கி. கஷ்டப்பட்டு ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறேன்.
ஆனால் இந்த நல்ல சினிமா நாலு பேர் மட்டுமே பார்கிற படமாக இல்லாமல் ஒரு கமர்ஷியல் படமாக இருந்ததால் தான் இத்தனை நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல்நாள் 10 முதல் 15 பேர்தான் தியேட்டரில் இருந்தார்கள்.

திங்கள்கிழமை அதே தியேட்டரில் 50 முதல் 60 பேர் இருந்தார்கள்.இது போன்ற படங்களுக்கு கொஞ்சம் மூச்சு விட நேரம் வேண்டும். வருகிற வெள்ளிக்கிழமை மேலும் படங்கள் வருவதால் இந்த படத்தை உங்க குழந்தையாக, உங்கள் படமாக நினைத்து இன்றும் ஒரு வாரத்திற்கு தியேட்டரில் படத்துக்கு இடம் கொடுங்கள். ஒரு காட்சிகளை குறைத்தாவது கொடுங்கள்.

2வது வாரமும் படம் சரியாக போகவில்லை என்றால் நீங்கள் எந்த முடிவும் எடுத்துக் கொள்ளுங்கள்இவ்வாறு பார்த்திபன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *