தற்போதைய செய்திகள்

எந்த கருத்து வேறுபாடும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் . அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என திருச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

நூற்றாண்டு விழா 
திருச்சி ஜி.கார்னரில் நேற்று மாலை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடந்தது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சாதனைகள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 21-வது மாவட்டமாக திருச்சியில் நடக்கிறது. இன்னும் 8 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது. சென்னையில் ஜனவரி மாதம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்க உள்ளார். முதல்வர்-துணை முதல்வருக்கு அவரவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Leave a Reply