BREAKING NEWS

எதிர்ப்பு குரல்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்…

 

 


சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைது செய்யப்பட்ட செய்தி நேற்று முன்தினம் காலையில் இந்திய அளவில் சமூக ஊடகத்தில் டிரெண்டாகி உள்ளது.

விமானம் பயணம் நெடுக சோபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது ‘பாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ என்று கோஷமிட்டுள்ளார். பாசிச பா.ஜ.க_ஆட்சி ஒழிக என்ற ஹாஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதல் பத்து இடத்திற்குள் வந்து இருக்கிறது. நேற்று முன்தினம் இரவிலிருந்து தமிழகமெங்கும் பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர் ஆகி இருக்கிறது சோபியா.

தூத்துக்குடி கந்தன்சாவடியை சேர்ந்தவர் சோபியா. ஆய்வு மாணவர். கனடாவில் படித்து வருகிறார். விடுமுறைக்காக இந்தியா வந்தவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்து இருக்கிறார். அதே விமானத்தில் இவருக்கு சில இருக்கைகள் தள்ளி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அமர்ந்திருக்கிறார்.

விமானம் பயணம் நெடுக சோபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது ‘பாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ என்று கோஷமிட்டுள்ளார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோபியாவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், சோபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.

இதன் விளைவுகளை அறிந்தும் சோபியா மன்னிப்பு கேட்க மறுத்ததாக கூறப்படுகிறது. அவர் வழக்கறிஞர் அதிசயகுமார், “சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோபியா அதற்கு மறுத்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

இந்த சோபியா குறித்து இப்போது தேடி தேடி படித்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இன்னொரு ஷோபியா தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். அவரை நினைவில் வைத்திருக்கிறோமா?

சோபியா குறித்து ஷோபியா…

ஷோபியா இசை கலைஞர். விளம்பரத் துறையில் பணியாற்றுகிறார். இதனையெல்லாம் கடந்து அவர் அடையாளம் மக்கள் தளத்தில் இயங்குவது. நடுநிசியில் போயஸ் கார்டனுக்குள் சென்று சசிகலாவுக்கு எதிராக பாடல் பாடியவர் ஷோபியா.

இதற்கு முன்பே, யுனிலிவிருக்கு எதிராக பாடலை பாடினார். ராப் இசையுடன் அலட்சிய குரலில் தொடங்கும் அந்த பாடல் யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை கேட்டது. உலக அளவில் அந்தப் பாடல் டிரெண்ட் ஆனது.

தூத்துக்குடி சோபியா கைது குறித்து, இசை கலைஞர் ஷோபியா கூறியதாவது:

“அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் சிறையில் அனுப்ப வேண்டுமென்றால், தேசத்தில் பாதிப் பேர் சிறையில்தான் இருக்க வேண்டும். சோபியாவை கைது செய்தது, அதையும் அவர் ‘தீவிரவாதி’ என்ற பதத்தை பயன்படுத்துவதை எல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றார்.

“எதிர்ப்பு குரல்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல்” என்கிறார் ஷோபியா.

மேலும் அவர், “இதற்கு நாங்கள் ஒரு வகையில் காரணம். ‘இதிகசங்கள்’ – ஐ படிப்பது, பின்பற்றுவது தவறு, யாரையும் எதிர்த்து பேசக் கூடாது என்றே எங்களுக்கு போதிக்கப்பட்டுவிட்டது. நாங்களும் அதனை நம்பிவிட்டோம். அதனால்தான் இத்தனை நாள் அரசியலற்றவர்களாக இருந்துவிட்டோம். இப்போது அனைத்தும் புரிந்து அதிகாரத்தை கேள்வி கேட்கும் போது அதிகாரம் கோபப்படுகிறது. உங்களுக்கு ஏன் இந்த வேலை என்கிறது.” என்று தெரிவித்தார்.

மாணவி சோபியா கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகி கூறுகையில், ” ஒரு இளம் பெண் தெரிவித்த புகார் மற்றும் கருத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர் பதில் கூற முயற்சித்து இருக்கலாம், அல்லது அதனை புறந்தள்ளிவிட்டு சென்று இருக்கலாம். கோஷமிட்டதை புகார் கூறும் அளவுக்கு குற்றமாகவோ அதற்கு மேலாக 15 நாட்கள் ரிமாண்ட் செய்யும் அளவு குற்றமாகவோ நான் கருதவில்லை” என்று கூறினார். ”இதற்கு ரிமாண்ட் செய்வது நாம் ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமோ எனற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்று வாசுகி தெரிவித்தார்.

”மேலும், விமான பயணத்தின்போது ஒரு மாணவி ஆட்சி குறித்து விமர்சிக்கிறார் என்றால் எந்தளவுக்கு இந்த கட்சியும், ஆட்சியும் மோசமாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்” என்று வாசுகி குறிப்பிட்டார்.

”எதுவும் பேசக்கூடாது , எதுவும் கேட்க முடியாது என்பதுதான் அரசுகளின் தற்போதைய டிரண்டாக உள்ளது. ‘கொள்கைக்கு பதிலாக கொள்கை; கருத்துக்கு பதிலாக கருத்து. எதுவும் கேட்கக்கூடாது. எந்த விமர்சனமும் செய்யக் கூடாது என்றால் என்ன ஜனநாயகம்” என்று அவர் வினவினார். ”

இது குறித்து பத்திரிக்கையாளர் பத்மினி கூறும்போது, ”பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை இந்த விஷயத்தில் சற்றே பொறுமை காத்திருக்கலாம். இயல்பாக நடந்து சூழலை சமாளித்து இருக்கவேண்டும். அவர் மிகவும் கோபமாக இருக்கும் சில காணொளிகள் பகிரப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து இருக்கலாம் என்பதே என் கருத்து” பத்மினி கூறினார்.




Leave a Reply