BREAKING NEWS

எட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் –  இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.

 

 


இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எட்டுவழிச்சாலை

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை அமைக்க, விவசாயிகள் கருத்து அறியாது நிலம் கையகப்படுத்தும் பணியை காவல்துறையைக் கொண்டு வருவது கண்டனத்திற்குரியது. இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.குணசேகரன், மாநில துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்துக் கேட்டனர்.

கைது

விவசாயிகளை சந்தித்ததை குற்றம் எனக்கூறி அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விவசாயிகளை சந்தித்ததாக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கண்டிக்கின்றது. எதேச்சதிகாரம் எங்கும் வெற்றிபெற்றது இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply