BREAKING NEWS

எடியூரப்பா ராஜினாமா எதிரொலி, ஆளுநரின் அழைப்புக்காக காத்திருக்கும் குமாரசாமி.

ஆளுநரின் அழைப்புக்காக காத்திருக்கும் குமாரசாமி
எடியூரப்பா ராஜினாமா எதிரொலி
பெங்களூர்,மே 19-

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு முன்பாக எடியூரப்பா தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஆளுநரிடம் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறார் குமாரசாமி.

பெரும்பான்மை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க பெரும்பான்மை இல்லாத நிலையில், பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழை ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதல்-அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க திட்டமிட்டிருந்தது.

ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக நேற்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பெருபான்மையை நிருபூக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன். பெரும்பான்மை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

ராஜினாமா

காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் தவிர அனைவரும் பதவியேற்றனர். இதையடுத்து சபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பா.ஜ.க. உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு பேரவை மீண்டும் கூடியது. காங்கரஸ் உறுப்பினர்கள் 2 பேரும் பதவியேற்றனர். அதன்பின்னர் தனது உணர்ச்சிப்பெருக்கு உரையை வாசித்த எடியூரப்பா, பெரும்பான்மை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்படுவதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார்.

காத்திருப்பு

இதை தொடர்ந்து ராஜ்பவனுக்கு சென்ற எடியூரப்பா ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பிற்காக காத்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி, பேரவையின் வாசலில் நிருபர்களிடம் பேசுகையில், ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் அவசரப்படவில்லை. ஆளுநரிடம் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.




Leave a Reply