BREAKING NEWS

எச்.டி.எப்.சி. வங்கியில் டிஜிட்டல் கடன் அறிமுகம்.

நாட்டின் முதன் முறையாக, எச்.டி.எப்.சி. வங்கி மியூச்சுவல் பண்ட்ஸ்- க்கான டிஜிட்டல் கடன் ஒன்றை பரிமாற்ற முகவர் சிஎம்எஸ்-உடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்கள் இப்போது மியூச்சுவல் பண்ட்ஸ் சொத்துக்களை ஆன்லைனில் அடமானம் வைத்து 3 நிமிடத்திற்குள் தங்கள் கணக்கில் ஓவர் டிராப்ட் பெறலாம். அவர்கள் எச்.டி.எப்.சி பேங்க் வலைத்தளத்தின் மூலம் 3 எளிய வழிமுறைகளில் இப்போது இந்த தயாரிப்புகளை பெறலாம்.

இந்த தயாரிப்புடன், வாடிக்கையாளர்கள் தங்கள் மியூச்சுவல் பண்ட்ஸ் போர்ட்போலியோவினை இணக்கமாக பயன்படுத்தி தங்களது முதலீடுகளை விற்காமல் அல்லது அவர்களின் வழக்கமான முதலீட்டுத் திட்டங்களை எஸ்.ஐ.பி.- களை நிறுத்தாமல் எந்தவிதமான தற்செயல் செலவுகளுக்காக அல்லது அவசரத் தேவைகளுக்கோ பயன்படுத்தலாம். மியூச்சுவல் நிதிக்கு எதிரான கடன்கள் இந்திய குடியிருப்பாளர்களுக்கும், மற்றும் போர்ட்போலியோவின் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்படும்.




Leave a Reply