BREAKING NEWS

ஊரக தூய்மை பராமரிப்பு கணக்கெடுப்பில் தமிழக அரசுக்கு தேசிய விருது முதல்வரிடம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வாழ்த்து

ஊரக பகுதி தூய்மை பராமரிப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட சிறந்த மாநிலத்துக்கான விருதுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து பெற்றார்.

முதல்வரிடம் வாழ்த்து

ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற மதிப்புகளின் அடிப்படையில் இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருது மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், தமிழகத்துக்கு அளிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் பிரதமர் மோடியிடம் இருந்து அந்த விருதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார். இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட விருதுடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *