BREAKING NEWS

ஊதியம் வழங்காததை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் திடீர் போராட்டம்

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து திடீரென மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவுப் பணியாளர்களாகவும், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்கவும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறியும், இரண்டு மாத காலமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியைப் புறக்கணித்து ஜிப்மர் வளாகத்தினுள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பணியிலிருந்து நீக்கும் முயற்சியை மேற்கொள்வதாகவும், ஊதியம் வழங்கவில்லை என்றால் பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.




Leave a Reply