தற்போதைய செய்திகள்

ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

ஊட்டி, மே.17-

ஊட்டியில் 12-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார்.

மலர்கண்காட்சி

நீலகிரி மாவட்டம் உதகையில், 122-வது மலர்கண்காட்சி தொடக்க விழா மற்றும் குந்தா நீரேற்று புனல் மின்திட்டப் பணிகள் துவக்க விழா 18.05.2018 நடைபெறுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்குகிறார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில், மலர் காட்சி மற்றும் குந்தா நீரேற்று புனல் மின்திட்டப் பணிகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்து, விழா பேரூரையாற்றுகிறார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரும், எரிசக்திதுறை முதன்மை செயலாளருமான விக்ரம் கபூர் சிறப்புரையாற்றுகிறார்.

பங்கேற்பாளர்கள்…

விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஆர்.கணேஷ், சாந்திராமு, திராவிடமணி மற்றும் பால் உற்பத்தியாளர் இணைய தலைவர் அ.மில்லர், சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சிவில்/நீர்மின்திட்டங்கள் தலைமை பொறியாளர் விவேகானந்தம், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் என்.சுப்பையன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

 
Leave a Reply