BREAKING NEWS

உலக நன்மைக்காக அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

 

 

திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் துறையூர் ஓங்கார குடில் அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் உலக நன்மைக்காகவும், பருவ மழை பொழியவும், திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், குடும்ப ஒற்றுமை நிலவவும், தீராத நோய் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும் மகா திருவிளக்கு பூஜை திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

ஒங்கார குடில் ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகள் ஆசிக்கு பிறகு பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி வைத்து உலக நன்மைக்காகவும், பிரச்சினைகள் விலகவும் வேண்டி வழிபட்டனர்.

மகா திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நோய் தீர்க்கும் மூலிகை கஞ்சி

இதுகுறித்து அச்சங்கத்தை சேர்ந்த சோமாசிபாடி பாண்டுரங்கன் கூறுகையில், அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பாக இது வரை சுமார் 6 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2,714 ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனது. இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு 5,667 பேர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு தினமும் மாலையில் நோய்கள் பல தீர்க்கும் மூலிகை அருட்கஞ்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.

====

பட விளக்கம்

திருவண்ணாமலையில் அகத்தியர் சித்தர் சன்மார்க்க சங்கம் சார்பில், உலக நன்மைக்காக 3 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.




Leave a Reply