BREAKING NEWS

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் – 2வது முறையாக  பிவி சிந்து வெள்ளிபதக்கம் வென்று சாதனை.

 

 

 

சீனாவின் நான்ஜிங் நகரில் 24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் மற்றும் இந்தியாவின் பி வி சிந்து ஆகியோர் மோதினர். இதில் கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி

தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை பிவி சிந்து கைப்பற்றியுள்ளார்.

2-வது முறை வெள்ளி வென்ற சிந்து

பிவி சிந்து கடந்த ஆண்டும் (2017) இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பிவி சிந்து பதிவு செய்துள்ளார்.




Leave a Reply