BREAKING NEWS

உலகின் முதல் மிதவை அணுமின் நிலையம் தனது பயணத்தை தொடங்கியது

உலகின் முதல் மிதவை அணு மின் நிலையமான ‘அகாடமிக் லோமொனோசோவ்’ ,பெவிக் எனும் ரஷ்ய துறைமுக நகரை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

பெவிக் நகரம் ரஷ்யாவின் கிழக்கு திசைக் கோடியில் உள்ள சுகோட்கா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. கடும் குளிர் நிலவும் பூமியான அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான மின்சாரம் மற்றும் வெப்பத்தை இந்தப் புதிய அணு மின் உற்பத்தி நிலையம் வழங்கும் என அந்த நாட்டு விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தநாட்டின் அணு மின் உற்பத்தி கழகமான ரோஸாட்டம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்ஸி லிக்காசேவ் இந்த மிதக்கும் மின் நிலையப் பயணத்தைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ‘உலகின் வடகோடியில் அமைந்துள்ள கடைசி அணு மின் நிலையம்’ இதுதான் எனப் பதிவு செய்யப்படுகிறது.




Leave a Reply