BREAKING NEWS

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல் –  3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

2018-ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதைவிட 3 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியை தருகிறது.

தரவரிசை பட்டியல்

இங்கிலாந்தைச் சேர்ந்த கியூ.எஸ். என்ற நிறுவனம், உலகெங்கிலும் 84 நாடுகளில் உள்ள ஏறக்குறைய ஆயிரம் பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களை வரிசைபடுத்தி வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசை பட்டியலின் படி, எந்த பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தீர்மானிப்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கு வழங்குவதுடன், நீங்கள் சிறப்பானவர்களாக சிறந்தவர்களாக விரும்பினால், நீங்கள் தேர்வு செய்து பயில வேண்டிய உலகளவிலான பல்கலைக்கழகங்கள் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளன.

கல்வி நிறுவனங்களில் இருக்கும் வசதிகள், கற்பிக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலிடம்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலின் படி, அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 7-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், குறைந்த அளவே சர்வதேச மாணவர் விகிதத்தை பெற்றுள்ளதால் பின்னுக்கு தள்ளப்படுகிறது.

ஹார்வேர்டு பல்கலைக்கழகம், தற்போது 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஒரு இடத்திற்கு முன்னேறி வருகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த பல்கலைக்கழகம் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமான செய்தி என்றாலும், உலகில் சிறந்த மற்றும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட போட்டிகள் மீது முதலாளிகளிடையே நற்பெயரை பெற்று விளங்குகிறது.

162-வது இடம்

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் 20-வது இடத்திலும், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 25-வது இடத்திலும், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் 31-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதில், மும்பையின் இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐஐடி) 17 இடங்கள் முன்னேறி 162-வது இடத்திலும், பெங்களூர் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்த்திற்கு முன்னேறி உள்ளது.

கடந்த ஆண்டு 172-வது இடத்தில் இருந்த தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் அதே இடத்தில் நீடிக்கிறது. சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் 264-வது இடத்தில் நீடிக்கிறது.




Leave a Reply