BREAKING NEWS

உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினில் வீரர்களுக்கு உயரிய சிகிச்சை – இஸ்ரோவுடன் பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்.


 

நாட்டின் மிக உயர்ந்த பகுதியான சியாச்சினில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பான உயரிய சிகிச்சை அளிக்க இஸ்ரோவுடன் மத்திய பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

விமானப்படை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மேம்பாடு மற்றும் கல்வி தொலைத்தொடர்புப் பிரிவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய ராணுவ, கடற்படை, விமானப் படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க இஸ்ரோ ஏற்கனவே அமைத்திருக்கும் 20 மருத்துவ அமைப்புகளையும் தாண்டி, தற்போது புதிதாக 53 மருத்துவ அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

உலகின் மிக உயரமான எல்லைப் பகுதியாக விளங்கும் சியாச்சினில் வெறும் ஒரு மருத்துவ அமைப்பு மட்டும் உருவாக்கப்படாமல், வீரர்ளுக்கு ஆலோசனை வழங்கும் 4 மெடிசின் நோட்ஸ் உருவாக்கி அதன் மூலம் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகைக் காணப்பட்டுள்ளது.

வானிலை

இந்த எல்லைப் பகுதியில் மிக மோசமான எதிரி வானிலைதான். இப்பகுதி ஆண்டுக்கு ஒரு சில மாதங்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். அதுபோன்ற சமயத்தில் செயற்கைக் கோள் மூலம் தகவல் பரிமாற்றங்கள் செய்யும் வசதி கொண்ட டெலிமெடிசின் நோட்ஸ் மூலம் உயிர் காக்கும் மருந்துகள் வரவழைக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.




Leave a Reply