BREAKING NEWS

உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி ( 4 காலம் டாப் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடல்நலக்குறைவு

காஞ்சிபுரம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ரஜினிகாந்த்,

தஞ்சாவூர் வட்ட காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த காசியய்யா, வேலூர், மேல்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சீனிவாசன், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரசேகர், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த துரைராஜ், விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திருப்பதி, மல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பழனி செல்வபாரதி, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கணேசமூர்த்தி, அரியலூர், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த குமார் ஆகியோர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

25 குடும்பங்கள்

மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த வந்த பிச்சையம்மாள், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுவாமிநாதன், வாய்மேடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த எம். கண்ணையன், கயத்தார் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ராஜமாரி, சேலம், பொருளாதாரக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கணேசன், ஓமலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சரவணன், சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜானகிராமன், திருச்சி ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த அசோக் குமார், கொள்ளிடம் காவல் நிலைய தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ராஜா,புதுக்கோட்டை, ஆலங்குடி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கோதண்டபாணி, கன்னியாகுமரி, ஈத்தாமொழி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த மணிகண்டன் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

3 லட்சம் நிதி

திருவள்ளூர், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த கணேசன், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வேணுகோபால், சென்னை, புனித தோமையர் மலை, ஆயுதப்படை, இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்த வந்த சுபாஷ், தூத்துக்குடி, காடல்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஜேக்கப், கிருஷ்ணகிரி, பாரூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சுரேஷ்குமார் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *