BREAKING NEWS

உயிரியல்-வேதியியல் ஆயுத தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் முயற்சி

உயிரியல் மற்றும் வேதியியல் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாக ஜெர்மனி அரசு தெரிவித்து உள்ளது.அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது என ஜெர்மனி அரசு தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டை லிங்கே இடது சாரி கட்சியின் செவிம் டாக்டெலன் உள்பட பலர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அளித்து உள்ள அதிகாரபூர்வ பதிலில் ஜெர்மன் அரசு இதனை தெரிவித்து உள்ளது.

ஜெர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை சேவை அமைப்பு தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஜெர்மன் அரசு பதில், அளித்து உள்ளது. அணுசக்தி உயிரியல் மற்றும் வேதியியல் பொருட்களை ரகசியமாக கொள்முதல் செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாக அதில் கூறப்பட்டு உள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *