BREAKING NEWS

உத்தரபிரதேசத்தில் வழக்கறிஞர், வழிமறித்து சுட்டு கொலை

உத்தரபிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டு கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முகேஷ் ஷர்மா (58) என்பவர் மீரட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், இவர் மீரட் பார் அசோசியேஷனில் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.

இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,”சம்பத்தன்று அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர்.

வழிமறைத்த அவர்கள் முகேஷ் ஷர்மாவை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் குண்டடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *