BREAKING NEWS

உதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக ராமேஸ்வரம் திகழ்கிறது. ஆகவே ராமநாதபுரத்துக்கும் விமான சேவையைத் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுரேஷ்பிரபுக்கு கடிதம்

இதுகுறித்து, மத்திய வர்த்தகம்-தொழில், விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ‘உதான்’ திட்டத்தின் கீழ் பிராந்தியங்களுக்கு இடையில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த உங்களின் அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சேலத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உதான் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தொழில்துறை மையம் ‘உதான்’ திட்டத்தின் முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ‘ஆட்சேபணை இல்லை’ கடிதம் இன்னும் பெறவிருப்பதால் அங்கு விமான போக்குவரத்து பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது. ஓசூர் விமான நிலையம், கிருஷ்ணகிரி தொழில்துறை மையத்தின் வளர்ச்சிக்கும், சென்னை – பெங்களூர் தொழில்துறை காரிடார் அமைப்பின் மேம்பாட்டுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே ஓசூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவில் விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவிடு வேண்டுகிறேன்.

நெய்வேலி

‘உதான்’ திட்டத்தின் முதல் கட்டத்தில் நெய்வேலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏர்லைன் ஆப்பரேட்டர்களுடன் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிவுக்கு வந்தள்ளன. ஆகவே நெய்வேலிக்கும் விமானப் போக்குவரத்தை இயக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டக்கொள்கிறேன்.

சுற்றுலா மையம்

மத்திய அரசின் உதான் திட்டம் பகுதி 2-ல் ராமநாதபுரம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தியா முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். சுற்றுலா மையங்களில் ராமேஸ்வரம் முக்கியமான ஒரு சுற்றுலாத் தலமாகும். ஆகவே ராமநாதபுரத்துக்கும் விமான சேவையைத் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும். இந்த விவகாரங்களில் தங்களது நேரிடையாக தலையிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply