BREAKING NEWS

ஈழத்தமிழர் இனப்படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்க படும் வரையில் தமிழர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்த உள்ளார்.

 

சென்னை, மே 18-

ஈழத்தமிழர் இனப்படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்க படும் வரையில் தமிழர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்த உள்ளார்.

இனப்படுகொலை

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் சுயமரியாதையுடன் வாழும் உரிமையைக் கேட்டு போராடியதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 9-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் எட்டப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சறுக்கல்கள்

இலங்கை இனப்படுகொலை நடந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படவில்லை. அவர்களை தண்டிக்கும் முயற்சியில் முன்னேற்றங்களை விட சறுக்கல்களே அதிகமாக உள்ளன.

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அந்தப் பணிகளை இந்தியா மேற்கொள்வது தான் பொருத்தமாகவும், வெற்றிகரமானதாகவும் அமையும். மத்திய ஆட்சியாளர்கள் தாமாக முன்வந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையில், இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை தமிழர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.




Leave a Reply