BREAKING NEWS

ஈக்வடாரில் நடைபெற்று வந்த போராட்டம் முடிந்தது

ஈக்வடாரில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு அதிபர் லெனின் மொரேனோ தெரிவித்துள்ளார்.

ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் வசிக்கும் அந்நாட்டில், அரசியல் நிலையற்ற தன்மை நீண்ட காலமாக நிலவி வருகிறது. 2007ம் ஆண்டு ரபேல் கொர்ரியாவை ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் பொருளாதாரக் கொந்தளிப்பை சுட்டிக்காட்டி நடைபெற்ற போராட்டங்களால் 3 அதிபர்களின் அரசு கவிழ்க்கப்பட்டது.

இதையடுத்து 2017ம் ஆண்டு அதிபரான லெனின் மொரேனே, 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த தாறுமாறாக வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியத்தை நீக்குவதாக அறிவித்தார்.

இதையடுத்து, க்விட்டோ குவாயக்வில் உள்ளிட்ட பல நகரங்களில், வாடகைக் கார், பேருந்து மற்றும் லாரிகளின் ஓட்டுநர்கள், தொழிலாளர் அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கல்வீசி, டயர்களை சாலையில் போட்டு கொளுத்திய போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தி விரட்டியடித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈக்வடார் அதிபர் லெனின், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து பல இடங்களில் போராட்டம் முடிவுக்கு வந்ததை அறிந்து கொண்டதாகவும், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தஎரிபொருள் மானியத்தால் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாகவும் போராட்டங்களால் ஈக்வடார் செயலற்றுப் போக அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதிபர் லெனின் மொரேனோ திட்டவட்டமாக தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *