BREAKING NEWS

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது. 16-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வருகிற 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில், சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இவர், இலங்கை இறுதிக்கட்ட போரின் போது, பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போனதற்கும் காரணமாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இருப்பினும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. 16-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனிடையே தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *