BREAKING NEWS

இம்பாலில், நாட்டின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை இம்பாலில் அமைக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்

தேசிய விளையாட்டு பல்கலையை மணிப்பூர் மாநிலம், இம்பாலில் அமைக்கும் மசோதாவுக்கு மே 23 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

ஊக்குவிக்க..

விளையாட்டு கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சிறந்த, ஒழுக்கத்துடனான விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் இந்த பல்கலை அமைக்கப்பட உள்ளது.

இம்பால் மாவட்ட கவ்டுருக் பகுதியில் 325.90 ஏக்கர் நிலம் மணிப்பூர் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி அடைய செய்வதே இந்த பல்கலையின் பணியாக இருக்கும் என கூறப்படுகிறது.




Leave a Reply