BREAKING NEWS

இபே நிறுவனத்தை இழுத்து மூடுகிறது பிளிப்கார்ட்.


 

வரும் ஆகஸ்ட் மாதம் இபே.இன் நிறுவனத்தை இழுத்து மூடவுள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

மின்னஞ்சல்

இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாவது:

இபே.இன் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள பிளிப்கார்ட் முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி இபே வலைதளத்தில் அனைத்து வாடிக்கையாளர் பரிமாற்றங்களும் நிறுத்தப்படும்.

தொழில்நுட்பம்

இபேவுக்கு பதில் புதுப்பிக்கப்பட்ட பொருள்களின் விற்பனைக்காக, நவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட புதிய தளம் ஒன்று புதிய பிராண்ட் பெயரில் அறிமுகம் செய்யப்படும். இது பலதரப்பட்ட பார்வையாளர்களின் தேவை இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்கும். இந்த புதிய பிராண்டில் தொடர்ந்து முதலீடு செய்ய பிளிப்கார்ட் உறுதிபூண்டுள்ளது என்று கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

விற்பனை

கடந்த ஆண்டு, இபே, டென்ஸன்ட் மற்றும் மைக்ரோஸாப்ட் நிறுவனங்களிடமிருந்து பிளிப்கார்ட் 140 கோடி டாலரை திரட்டிக் கொண்டது. அப்போது இபே.இன்( இந்திய வர்த்தக பிரிவு) பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடப்பாண்டு மே மாதத்தில் இபே நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பிளிப்கார்ட்டுடன் கொண்டிருந்த கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இபே இந்தியாவை மீண்டும் தொடங்கி வேறுவிதமான இணைய வர்த்தக நிறுவனமாக செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேஸி.காம் நிறுவனத்தை கையகப்படுத்தியன் மூலம் கடந்த 2004-ஆம் ஆண்டு இபே நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைந்து தனது செயல்பாட்டை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply