BREAKING NEWS

கோடையின் உச்சக்கட்டமான 7 இடங்களில் வெயில் சதம்:

சென்னை மீனம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் வெயில் 105 டிகிரி பதிவானது.

கோடையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கி, 28-ந் தேதி நிறைவடைந்தது. அடிக்கடி பெய்த கோடை மழையால், பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. அக்னி நடத்திரம் முடிந்த மறுநாள் முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று 105 டிகிரியை எட்டியது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்றதால், வடதமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை நிலவுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் 105 முதல் 109 டிகிரி வெப்பம் நீடிக்கும்.

சென்னையில் 105 டிகிரி

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 105.08 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.

சென்னை மீனம்பாக்கத்தில் 105.08 டிகிரி, வேலுாரில் 103.46 டிகிரி, கடலுாரில் 102.56 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.38 டிகிரி, நாகப்பட்டினத்தில் 100.22 டிகிரி, காரைக்கால், புதுச்சேரியில் தலா 102.04 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.




Leave a Reply