BREAKING NEWS

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 436ஆக அதிகரிப்பு.

 

இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த 5-ந் தேதி 6 புள்ளி 9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை 436ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளை விட்டு வெளியேறிய மூன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலநடுக்கத்தால் 342 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply