BREAKING NEWS

இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.

 

திருவள்ளூர் அருகே தனது காருக்கு தானே தீவைத்துவிட்டு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசியதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி அனுமந்த் சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் காளிகுமார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் இந்து மக்கள் கட்சி அனுமந்த் சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் காளிகுமார், அவரது அண்ணன் மகன் ரஞ்சித், கட்சி நிர்வாகி ஞானசேகரன் ஆகியோர் காரில் சென்றதாக கூறப்படுகிறது.

அவர்களை காரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த 2 மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் கார் எரிந்துவிட்டதாகவும் 3 பேரும் போலீசில் புகார் அளித்தனர்.

நாடகம்

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி மற்றும் தடயவியல் நிபுணர்கள், கார் எரிந்த இடத்தை ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, காளிகுமாரை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீசார், காளிகுமார் உடன் சென்ற ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

அதில், காரை தாங்களே கொளுத்திவிட்டு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், காரை கொளுத்துவிட்டு, நாடகமாடியது ஏன் என விசாரித்தனர். அப்போது பிரபலமான அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுது போன்று, தங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

——




Leave a Reply