BREAKING NEWS

இந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.


 

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த எடமேலையூரை சேர்ந்தவர் முத்துசாமி(21). இந்திய கைப்பந்து அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்

பிரிக்ஸ் போட்டி

இந்திய கைப்பந்து அணி நேற்று தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் ெதாடங்கிய 21 வயதுக்குட்பட்டோருக்கான பிரிக்ஸ் 2018 கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது, இந்த போட்டிகள் வரும் 22-ந் தேதி வரை நடக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு, கேப்டனாக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்துசாமி எடமேலையூரில் 6-ம் வகுப்பு வரை படித்தார். அப்போது எடமேலையூரில் உள்ள கைப்பந்து கழகத்தில் பயிற்சி பெற்ற போது, முத்துசாமியின் திறமையை அறிந்த சங்கத்தினர் அவரை திருச்சி, சென்னை, கோவையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்த்து பயிற்சி அளித்தனர்.

ஆட்டநாயகன்

அப்போது முத்துசாமி பள்ளி அளவில் நடந்த மாவட்ட, மாநில போட்டிகளில் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார். இதன்பின்னர் கல்லூரியிலும் கைப்பந்து அணியில் இடம்பிடித்து சிறந்த வீரராக விளங்கினார். பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டிகளில் இவர் பங்கேற்ற அணிகள் வெற்றி வாகை சூடின.

பல்வேறு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக பரிசு பெற்ற முத்துசாமிக்கு, பாரத் பெட்ரோலிய நிறுவனம் வேலை வழங்கியது. அத்துடன் அந்நிறுவனம் தனது கேரள அணியில் விளையாட முத்துசாமிக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்த முத்துசாமி கடந்த 8 மாதமாக இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் முத்துசாமி உயர்ந்துள்ளார்.




Leave a Reply