BREAKING NEWS

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா அசத்தல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் போட்டியின் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் முத்திரை பதித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 913 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

புஜாரா (இந்தியா) 881 புள்ளியுடன் 3-வது இடத்திலும், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) 857 புள்ளியுடன் 4-வது இடத்திலும், நிக்கோலஸ் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ் 878 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் (இங்கிலாந்து) 862 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ரபடா (தென் ஆப்பிரிக்கா) 851 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் ஜடேஜா 794 புள்ளியுடன் 6-வது இடத்திலும், அஸ்வின் 763 புள்ளியுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜாவுக்கு 3-வது இடம் கிடைத்து உள்ளது. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) முதல் இடத்திலும், சகிப்அல்ஹசன் (வங்காள தேசம்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் தர வரிசையில் இந்தியா 113 புள்ளியுடன் மீண்டும் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து (111 புள்ளி), 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (108 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகள் 4 முதல் 9வது இடத்திலும் உள்ளன.




Leave a Reply