BREAKING NEWS

இந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி கண்ணோட்டம் பற்றி சில தகவல்களை காண்போம்.இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாக்காவில் முதல் முறையாக டெஸ்ட் நடைபெற்றது. இதில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரு அணிகள் இடையே 6 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 5 முறை தொடரை கைப்பற்றியது. ஒரு தடவை ‘டிரா’ ஆனது. இதுவரை இரு அணிகளும் 9 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 7ல் வெற்றி பெற்றது.

2 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்திய அணி 2017ம் ஆண்டு ஐதராபாத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வங்காளதேசம் அதிகபட்சமாக 400 ரன் (டாக்கா, 2000) குவித்து இருந்தது.இந்திய அணி 2010ம் ஆண்டில் 243 ரன்னில் ஆல் அவுட் ஆனது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். வங்காளதேசம் 91 ரன்னில் (2000 ஆண்டு) சுருண்டு இருந்தது.தெண்டுல்கர் 9 இன்னிங்சில் 5 சதத்துடன் 820 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

அதிகபட்சமாக 248 ரன் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 3 சதத்துடன் 560 ரன் எடுத்துள்ளளர்.வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 14 இன்னிங்சில் 31 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். 87 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும். இர்பான் பதான் 18 விக்கெட்டும், கும்பளே 15 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இர்பான் பதான் ஒரு டெஸ்டில் அதிகபட்சமாக 96 ரன் கொடுத்து 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *