BREAKING NEWS

இந்தியா உள்பட 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்தநிலையை சந்திக்கும்

இந்த ஆண்டில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சர்வதேச பண நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குநரான கிறிஸ்டலினா ஜியார்ஜிவா உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்தநிலையைச் சந்தித்து வருவதாகக் கூறினார். பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம் என கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்தார்.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போவதாகவும் அவர் கணித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ச்சி கண்ட நாடுகளில், பொருளாதார நிலை இயல்பாக இருக்கும் என்றும், பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் படிப்படியாக குறையும் என்று கிறிஸ்டலினா ஜியாஜிவா கணித்துள்ளார். பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தக திறனைப் பெருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *