BREAKING NEWS

இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் விவோ வை91 மற்றும் வை91ஐ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.10,990 மற்றும் ரூ.7,990 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் மே மாதத்தில் இவற்றின் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இரு ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

விவை வை91 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,490க்கும், விவோ வை91ஐ 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் ரூ.6,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது முந்தைய விலையை விட ரூ.500 குறைவு ஆகும். ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இவற்றின் விலை விரைவில் மாற்றப்படும் என்றும் ஆஃப்லைனிலும் இந்த விலையிலேயே விற்பனை செய்யப்படும்.சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வை91 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ க22 ஆக்டாகோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் பன்டச் ஓ.எஸ். 4.5, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி.

இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.இத்துடன் அழகிய செல்பிக்களை எடுக்க 8 எம்.பி. முன்பக்க கேமரா, பேஸ் அன்லாக் வசதி, பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.விவோ வை91ஐ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ க22 ஆக்டாகோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 8 எம்.பி. செல்பி கேமரா, ஞூ/1.8 வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *