BREAKING NEWS

இந்தியாவில் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய எக்ஸ்7 காரை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 கார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், இந்த கார் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் எக்ஸ்டிரைவ் 40ஐ மற்றும் எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 கார் எக்ஸ்5 எஸ்.யு.வி. மாடலுக்கு அடுத்த வேரியண்ட்டாக அறிமுகமாகியுள்ளது. இத்துடன் 7 பேர் அமரக்கூடிய முதல் பி.எம்.டபுள்யூ. வாகனமாக புதிய எக்ஸ்7 இருக்கிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. சி.கே.டி. முறையில் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 40ஐ மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பி.எம்.டபுள்யூ. எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் இன்லைன் 6சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 260 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply