BREAKING NEWS

இந்தியாவில் பிரபலமான விளையாட்டு வீரர் தோனி – தனியார் நிறுவனம் எடுத்த சர்வேயில் தகவல்.


 

சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளி இந்திய விளையாட்டு வீரர்களில் மிகவும் பிரபலமானவர் பட்டியலில் எம்.எஸ்.தோனி முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் இந்திய அணிக்கு டி20, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். மூன்று உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த ஒரே கேப்டன் இவர்தான்.

முஷாரப் பாராட்டு

இந்திய அணியில் அறிமுகமாகும்போது நீண்ட முடியுடன் வலம்வந்தார். இந்த ஹேர்ஸ்டைல் கிரிக்கெட் ரசிகர்களிடன் ஜூரமாக பற்றிக் கொண்டது. இவரை பின்பற்றி பெரும்பாலான ரசிகர்கள் நீளமாக முடி வளர்க்க ஆரம்பித்தனர். அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூட டோனியை சிகை அலங்காரத்தை வெகுவாக பாராட்டினார்.

கூல் கேப்டன்

பேட்டிங்கில் அசூர பலம் படைத்த டோனி, ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை தனது பக்கம் இழுத்தார். ஆட்டக்களத்தில் எந்தவொரு நெருக்கடி காலத்திலும் கூலாக இருப்பது போன்ற பழக்கத்தால் கோடான கோடி ரசிகர்களை பெற்றுள்ளார்.

3-வது இடத்தில் கோலி

இந்நிலையில் ஒரு நிறுவனம் பிரபலமான விளையாட்டு வீரர் யார்? என்பது குறித்த ஒரு சர்வே நடத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை டோனி பின்னுக்குத் தள்ளியுள்ளார். டோனி 7.7 சதவிகிதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 6.8 சதவிகிதமும், விராட் கோலி 4.8 சதவிகிதம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது 10 ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.




Leave a Reply