BREAKING NEWS

இந்தியாவில் ஐபோன் விலை ரூ.27,000 குறைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஐபோன்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. இதே நிகழ்வில் ஐபோன் அறிவிப்புகளுடன் ஐபோன் XR, ஐபோன் 8 சீரிஸ் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

புதிய விலை குறைப்பு இந்தியாவிலும் அமலாகியிருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளால் விலை குறைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஐபோன் XR 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மாடல்களின் விலை ரூ. 27,000 குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64 ஜி.பி. வெர்ஷன்களின் விலை ரூ. 20,000 குறைக்கப்பட்டது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டும் குறைக்கப்பட்டிருந்தது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 128 ஜி.பி. மாடல்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது. ஐபோன் 7 சீரிஸ் மாடலின் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஐபோன் X சீரிஸ் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஐபோன்கள் தவிர ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலின் விலை ரூ.8,000 குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ஏற்கனவே கடந்த ஆண்டும் குறைக்கப்பட்டது.




Leave a Reply