BREAKING NEWS

‘‘இந்தியன் 2’’ படப்பிடிப்பு தீவிரம்

கமல் நடிக்கும் ‘‘இந்தியன்’’ படத்தின் 2ம் பாகம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. சில பிரச்சினைகள் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது முழுவீச்சில் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன.
இந்தியன் கதையின் கிளைமாக்சில் இந்தியாவிலிருந்து தப்பும் சேனாதிபதி, வெளிநாட்டில் இருந்து போன் செய்வது போன்றும், இந்தியனுக்கு சாவே கிடையாது என்பது போன்றும் முடியும்.
அதனால் இந்தியன் 2வின் தொடக்கம் வெளிநாட்டில் தொடங்குகிறது. அங்கு சில களையெடுப்புக்கு பிறகு இந்தியா வருவது மாதிரியான கதை. இதனால் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் ஒரு மாதம் வரை நடக்க இருக்கிறது
கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஈவிபி பூங்காவாவில் நடந்து வருகிறது.
அங்கேயே சில நாட்கள் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தற்போது கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார்.
இந்தியன் 2வில் பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக், பிரியா பாவனி சங்கர், காஜல் அவர்வால், வித்யூ ஜமால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்குகிறார்.




Leave a Reply