BREAKING NEWS

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.919 கோடி இழப்பு.

 



பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதல் காலாண்டில் ரூ. 900 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரம் இழப்பைக் கண்டுள்ளது.இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வருவாய் சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.5000 கோடியே 326 லட்சத்து 71 ஆயிரமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.5 கோடியே 174 லட்சத்து 50 ஆயிரத்தை ஒப்பிடும்போது இது 2.94 சதவீத வளர்ச்சியாகும்.

நிகர வட்டி வருவாய் ரூ.4 கோடியே 187 லட்சத்து 20 ஆயிரத்திலிருந்து 1.47 சதவீதம் அதிகரித்து ரூ.4 கோடியே 248 லட்சத்து 60 ஆயிரமானது. வட்டி சாரா வருவாய் ரூ.9 கோடியே 87 லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து 9.20 சதவீதம் உயர்ந்து ரூ.1000 கோடியே 78 லட்சத்து 11 ஆயிரமாக காணப்பட்டது.

வாரக் கடன் இடர்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1000 கோடியே 275 லட்சத்து 69 ஆயிரத்திலிருந்து கணிசமாக அதிகரித்து ரூ.2000 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரமானது.

இதையடுத்து, வங்கிக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூரூ. 900 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இழப்பு ரூ.400 கோடியே 99 லட்சத்து 09 ஆயிரமாக காணப்பட்டது.

ஜூன் மாத இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.3 லட்சத்து, 60 ஆயிரத்து ,986 கோடியிலிருந்து        ரூ.3 லட்சத்து 61 ஆயிரத்து 928 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




Leave a Reply