BREAKING NEWS

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ஸ்வேரேவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ஸ்வேரேவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால்


ரோம், மே 21-

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என நடால் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 6-1 என ஸ்வரேவ் கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

எலினா மீண்டும் சாம்பியன்

சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஷிமோனா ஹாலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.




Leave a Reply