BREAKING NEWS

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது.மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி8 பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதை உணர்த்தும் வகையில் மோட்டோ ஜி8 விளம்பர வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.விளம்பர வீடியோவின் படி மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. + 4 எம்.பி. சென்சார் மற்றும் ஏ.ஐ. அம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி8 பிளாக், ரெட் மற்றும் புளு என மூன்று நிறங்களில் உருவாகி இருக்கிறது.

இவைதவிர மோட்டோ ஜி8 சிறப்பம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் மோட்டோ ஜி8 பிளஸ் மாடலை விட புதிய மோட்டோ ஜி8 குறைந்த திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. ஆக்‌ஷன் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *