தற்போதைய செய்திகள்

இங்கிலாந்து அணி அறிவிப்பு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்

இங்கிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்


லார்ட்ஸ், மே 16-

பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 24-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணிக்காக 18 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் சுமார் ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை.இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வரும் 24-ந் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

பட்லருக்கு இடம்

இதற்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஸ் பட்லருக்கு இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-1. ஜோ ரூட், 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜானி பேர்ஸ்டோவ், 4. டாம் பஸ், 5. ஸ்டூ்வர்ட் பிராட், 6. ஜாஸ் பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. தாவித் மலன், 9. பென் ஸ்டோக்ஸ், 10. மார்க் ஸ்டோன்மேன், 11. கிறிஸ் வோக்ஸ், 12. கிறிஸ் வுட்.27 வயதாகும் பட்லர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடைசி 6 போட்டியில் ஐந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.




Leave a Reply