BREAKING NEWS

ஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை, ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட விவசாயிகள், மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு இன்று முதல் வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை 135 நாட்களுக்கு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1059 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply